மகளின் சாவுக்கு காரணமானவரை கைது செய்யகோரி தந்தை ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயற்சி...

Asianet News Tamil  
Published : Feb 13, 2018, 10:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
மகளின் சாவுக்கு காரணமானவரை கைது செய்யகோரி தந்தை ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயற்சி...

சுருக்கம்

father tried to fire hisself to arrest the victim for his daughter suicide ...

கடலூர்

மகளின் தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்ய கோரி ஆட்சியரகத்தில் மண்எண்ணெய் கேனுடன் நுழைந்த தந்தை குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க அலுவலக நுழைவுவாயிலில் காவலாளர்காள் குவிக்கப்பட்டு இருந்தனர்.  காவலாளர்களின் தீவிர சோதனைக்குப்பிறகே மக்கள், ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும், நேற்று காவலாளர்களின் கண்காணிப்பையும் மீறி ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக தனது மனைவி சுந்தரி, மகன் மூர்த்தி ஆகியோருடன் வந்த பண்ருட்டி தாலுகா முத்துகிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்த விவசாயி உத்திரம் என்பவர் ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் கேனை உள்ளே கொண்டு வந்துவிட்டார்.

அங்குள்ள, ‘போர்ட்டிகோ’ அருகே அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக மணணெண்ணெய் கேனை திறந்து உடலில் ஊற்ற முயன்றபோது, உதவி ஆய்வாளர் கவியரசன் அதனைப் பார்த்து ஓடிவந்து கேனை பிடுங்கினார். அதனால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

பின்னர், இதுதொடர்பாக உத்திரம் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோரிடம் உதவி ஆய்வாளார் கவியரசன் விசாரணை நடத்தினார்.

அப்போது விவசாயி உத்திரம், "எனது சொந்த ஊர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம். எனது மகள் சவீதாவை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் காதலித்து வந்தார். அவர் அவளை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார். மேலும் எனது மகள் திருப்பூரில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தையும் ஏமாற்றி வாங்கிக் கொண்டார். இதனால் மனம் உடைந்த எனது மகள் கடந்த 2-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாள்.

இதுபற்றி நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் செய்தேன். அதன்பேரில் அந்த வாலிபர் மற்றும் அவரது அக்காள், அத்தான் ஆகியோர் மீது காவலாளர்காள் வழக்குப்பதிவு செய்தனர். அவரது அக்காளும், அத்தானும் முன்ஜாமீன் வாங்கிவிட்டனர். அந்த வாலிபரின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனால் இந்த வழக்கை வாபஸ் பெறச்சொல்லி எதிர்தரப்பினர் எங்களை மிரட்டுகிறார்கள். அந்த வாலிபரை கைது செய்ய காவலாளர்கள் இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அவரை கைது செய்யாதவரை எங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. எனவே, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து ஆட்சியரிடம் தெரிவிக்குமாறு காவலாளர்கள் அறிவுறுத்தவே அதுகுறித்த மனுவை ஆட்சியரிடம் கொடுத்தார்.



 

PREV
click me!

Recommended Stories

ஸ்வெட்டர் ரெடியா மக்களே.. நடுங்க வைக்கப்போகும் பனி.. எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!