
அரசியல் களத்தில் விஜய்
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் விஜய். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்தி அசத்தினார். இதனையடுத்து கட்சியின் ஆண்டு விழா, பரந்தூர், நோன்பு திறப்பு உள்ளிட்ட ஒரு சில நிகழ்வுகளில் மட்டுமே விஜய் வெளியே வந்தார். அடுத்ததாக கோவையில் நடைபெற்ற கட்சியின் கருத்தங்கில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போதும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த சமயத்தில் விஜய்யின் வாகனத்தின் மீது ஏறுவதும்,
ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
பைக்கில் பின் தொடர்வதுமாக ரசிகர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து விஜய் ரசிகர்களுக்கு அறிவுரையை வழங்கினார். இந்த நிலையில் இன்று ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்ல திட்டமிட்டார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் கூடினார்கள். இந்த நிலையில் மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதன் படி, உங்கள் எல்லாரையும் பார்த்துவிட்டு நான் என் வேலையை பார்ப்பதற்காக போகிறேன். நீங்களும் பத்திரமா அவங்க அவங்க வீட்டிற்கு செல்லுங்கள்.
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்
ரசிகர்கள் யாரும் எனது வாகனதிற்கு பின்னாடியே தொடர வேண்டாம். பைக்கில் வேகமாக வருவதோ, பைக் மேலே இருந்துவிட்டு ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுவது இப்படி எல்லாம் செய்ய வேண்டாம். இந்த காட்சிகளை பார்க்கும்போதெல்லாம் மனதுக்கு ரொம்ப பதட்டமாக உள்ளது. கூடிய கூடிய விரைவில் வேறொரு சந்தர்ப்பத்தில் அனைவரையும் சந்திக்கிறேன் என தெரிவித்திருந்தார். விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தாலும் இன்றைய தினமும் விஜய் ரசிகர்கள் அதனை கேட்காமல் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் மீது ஏறிய சம்பவங்களும் அரங்கேறியது,
ரசிகர்கள் அத்துமீறல்
விமான நிலைய சாலை முழுவதும் கூடிய ரசிகர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது, போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது பால் பாக்கெட்டை உடைத்து தெளிப்பதுமாக ஈடுபட்டனர். மேலும் விஜய்யின் வாகனத்தை பைக் மூலமாக பின் தொடர்வதுமாக சென்றனர். போலீசாராலும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. விஜய்யின் மதுரை பயணத்தால் விமான நிலையமே ஸ்தம்பித்துள்ளது. விமானத்தை பிடிக்க வந்த பயணிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டனர்.