மனைப்பிரிவுகளை வரன்முறை செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.. எந்த தேதி வரைக்கும் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Feb 15, 2024, 8:15 AM IST

 எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள வரும் 29ம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில்  அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளுக்கு வரன்முறைப்படுத்தும்  திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற வரும் 29ம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அனுமதியற்ற மற்றும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 2017ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 29ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து 2023ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க: என்னது! 14 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை பதவியை கேட்டேனா? பிரேமலதா கொடுத்த பரபரப்பு விளக்கம்.!

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொண்டு வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழனியில் காலாவதியான பஞ்சாமிர்த விற்பனை? அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்து எஸ்கேப்பான வியாபாரிகள்

click me!