சென்னை: பீர் பாட்டில் வீசி மாணவர்கள் மோதல்.. கலவர பூமியான ரயில் நிலையம்.. 3 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்!

Published : Feb 14, 2024, 07:55 PM IST
சென்னை: பீர் பாட்டில் வீசி மாணவர்கள் மோதல்.. கலவர பூமியான ரயில் நிலையம்.. 3 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்!

சுருக்கம்

சென்னை ரயில் நிலையத்தில் இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதும் வீடியோ வெளியான நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற புறநகர் ரயில் அம்பத்தூர் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் நின்றபோது வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தை பயணிகள் தங்களுடைய மொபைலில் பதிவு செய்த வீடியோ வைரலாக பரவியது.

சென்னை பச்சையப்பாஸ் கல்லூரி மற்றும் பிரசிடென்சி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒருவரையொருவர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி மோதிக்கொண்டது பொதுமக்களுக்கும், ரயில் பயணிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அம்பத்தூர், பட்டரவாக்கம் ரயில் நிலையத்துக்கு வெளியே புதன்கிழமையன்று கற்கள் மற்றும் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி நிர்வாகத்துக்கு அரசு ரயில்வே போலீஸார் கடிதம் எழுதினர்.

இதனிடையே, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 2 கல்லூரிகளைச் சேர்ந்த 60 கல்லூரி மாணவர்கள் மீது 7 ஐபிசி பிரிவுகளின் கீழ் பெரம்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மாநில பிரசிடென்சி கல்லூரியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிமீ தூரம் பயணிக்கலாம்.. புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க அருமையான வாய்ப்பு..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!