நள்ளிரவில் மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி..! காரணம் என்ன.?

By Ajmal KhanFirst Published Nov 5, 2023, 8:19 AM IST
Highlights

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு அதிகமான காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டார். இதனையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு சார்பாக 10 ஆயிரம் மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்த போதும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதன் காரணமாக மருத்துவமனையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் சிகிச்சைகாக அனுமதிக்ப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்கியதன் காரணமாக மழை நீர்தேங்கியிருப்பதால் கொசுக்களாலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

மருத்துவமனையில் தங்கமணி

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதிகளவு இருமல் காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு தங்கமணியை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலையை பிரசோதனை செய்த மருத்துவர்கள் டெங்கு பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.  இதனையடுத்து டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல் காரணமாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

click me!