EPS : 40 எம்.பிக்களை வைத்துக்கொண்டு வழக்கம் போல் கும்ப கர்ண தூக்கத்தில் இருப்பதா.?திமுக அரசை விளாசும் எடப்பாடி

By Ajmal Khan  |  First Published Aug 9, 2024, 12:31 PM IST

தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதிற்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வை எட்டுமாறு மத்திய பாஜக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 


தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் கப்பல் மூலம் மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு மீனவர் மாயமாகியுள்ளார். இந்தநிலையில் தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் வலியுறுத்து வருகிறது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

Tap to resize

Latest Videos

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பதும், மாநில விடியா திமுக அரசு போதிய அழுத்தம் கொடுக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

Savukku : சவுக்கு சங்கருக்கு வந்த குட் நியூஸ்.! குண்டர் சட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மத்திய, மாநில அரசு நடவடிக்கை

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவதோடு நில்லாமல், தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதிற்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறேன். 

மேலும், மாநிலத்தில் ஆட்சியையும் நாற்பது எம்பிக்களை வைத்துக்கொண்டு வழக்கம் போல கும்பகர்ண தூக்கத்தில் இல்லாமல், இப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்திலும் மத்திய அரசிடமும் உரிய அழுத்தத்தை அளிக்குமாறு திமுக முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பாஜக முக்கிய பிரமுகருக்கு சம்மன்! பரபரக்கும் அரசியல் வட்டாரம்
 

click me!