EPS ADMK : அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கிய எடப்பாடி.! இது தான் காரணமா.?

Published : Jun 26, 2025, 02:10 PM IST
EPS

சுருக்கம்

திருவாரூரில் மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி ஆனந்தபாபுவை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். ஆடுகளை தோட்டத்தில் கட்டுவது தொடர்பான தகராறில் ஆனந்தபாபு மற்றும் அவரது தாயார் மூதாட்டியை தாக்கியதாக கூறப்படுகிறது.

EPS has expelled AIADMK executive : தமிழகத்தில் பல இடங்களில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள், வழிப்பறி உள்ளிட்டவைகள் நிகழ்ந்து வருகிறது. இதனை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லையென அதிமுக குற்றச்சாட்டை கூறி வருகிறது. மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கோரி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் அதிமுகவினர் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்த சூழலில் அதிமுக நிர்வாகி ஒருவரை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்;

அதிமுக அடிப்படை பொறுப்பில் இருந்தும் நீக்கம்

கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், C. ஆனந்தபாபு, (திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆனந்தபாபுவை கட்சியில் இருந்து நீக்குவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வெட்டிக்காட்டில், ஆடுகளைக் தோட்டத்தில் கட்டுவது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மீண்டும் ஏற்பட்ட தகராறில் 83 வயதான மூதாட்டி முத்துலெட்சுமியை அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் ஆனந்த் பாபு மற்றும் அவரது தாய் மலர்கொடி ஆகியோர் கட்டையால் தாக்கியுள்ளனர்.

மூதாட்டி கொலையில் அதிமுக நிர்வாகி

இதனால் பலத்த காயமடைந்த முத்துலெட்சுமி, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார் இதையடுத்து, மன்னார்குடி காவல்துறையினர் ஆனந்த் பாபு மற்றும் அவரது தாயார் மலர்கொடி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆனந்த் பாபுவைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்தபாபுவின் தாயார் மலர்கொடியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆசை ஆசையாய் பேசிய அபிஷ்.. வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இன்ஜினியர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
UDF மாடலை பார்த்து கத்துக்கோங்க.. பொங்கலன்றும் திமுகவை வம்புக்கு இழுத்த மாணிக்கம் தாகூர்.. கடுப்பில் உ.பி.க்கள்!