
Sengottaiyan expelled from AIADMK : சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், செங்கோட்டையனின் நடவடிக்கையை கடந்த ஆறு மாதமாக நாங்கள் பார்த்து வருகிறோம். அத்திக்கடவு அவினாசி திட்டம் முடிவடைந்த நிலையில் அங்கு இருக்கிற விவசாயி பெருங்குடி மக்கள் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள்,விவசாய சங்கங்கள், அத்திக்கடவு திட்டம் கொண்டு வந்ததற்கு பாராட்டு செய்தார்கள். கட்சி சார்பற்ற அந்த பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
அப்போது செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியில் அம்மா படம் புரட்சித்தலைவர் படம் இடம்பெறவில்லை எனக் கூறிய செங்கோட்டையன், அவரது தொகுதியில் நடைபெற்ற விலையில்லா சைக்கிள் தரும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் படம் இடம் பெறாத நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் படங்கள் மட்டுமே இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி சைக்கிள்களை வழங்கி சென்றுள்ளார்.
இப்போது உண்மை வெளிவந்து விட்டது. கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறுவது சரியான கருத்தல்ல அவருடன் இருப்பவர்கள் எல்லாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பிரிந்து சென்றவர்கள் இல்லை. ஓபிஎஸ் விவகாரத்தை பொருத்தவரை அவர் நீக்கப்பட்டதற்கு பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஓபிஎஸ் நீக்கப்பட்ட பிறகு அவரிடம் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என பொதுக்குழவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. கழக அடிப்படை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைப்பதோடு இவருடன் கழக உடன்பிறப்புகள் யாரும் மேற்கொண்ட நபருடன் எவ்வித தொடரும் வைத்துக்கொள்ளக்கூடாது என பொது குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது நான் சொல்லவில்லை அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
தீர்மானம் அதற்கு எதிராக செயல்பட்டால் தலைமை என்ன முடிவு எடுக்கும். பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். பொதுக்குழு எடுத்த முடிவின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இது நான் எடுத்த நடவடிக்கை இல்லை. சட்டதிட்ட விதியின்படி தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போது பார்த்தாலும் நான் அம்மா விசுவாசி என கூறி வருகிறது அப்படி என்றால் அமைச்சராக இருக்கும்போது அம்மா செங்கோட்டையனை எதற்காக உங்களை நீக்கினார். நான் முதலமைச்சரான பின்னர் தான் அமைச்சரவையில் அவருக்கு இடம் கொடுத்தோம். இதுதான் அவருக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைத்தது மாவட்ட செயலாளர் பதவியும் அம்மா இருக்கும்போது எடுத்து விட்டார்கள். இப்படி உண்மைக்கு மாறாக செய்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
டிடிவி தினகரன் பத்தாண்டுக்கு முன்பாகவே அம்மா அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியிருந்தார். அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.அம்மா இருக்கும் வரை பத்தாண்டு காலம் சென்னைக்கு வரவில்லை வந்தாலும் இருக்கிற இடம் தெரியாமல் இருந்து வந்தார். அம்மா மறைவுக்கு பின்னர் தான் சசிகலா அவர்கள் இருந்த காலகட்டத்தில் துணைப் பொதுச் செயலாளராக பதவி வாங்கினர். அப்போதும் கட்சியில் இணைந்து வரவில்லை இணைக்காமலேயே கொடுத்து விட்டார்கள். அம்மா நீக்கப்பட்ட ஒருவருக்கு பதவி கொடுத்தார்கள் அம்மா இருக்கும்போது கட்சிக்கு விரோத செயல் ஈடுபட்டதால் அம்மா நீக்கியிருந்தார்கள்.
அம்மா அவர்களே ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி இருந்தார்கள். இது பற்றி தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. பத்தாண்டு காலம் வனவாசம் போனவர் எங்களைப் பற்றி பேசுகிறார். அம்மா ஆணையிட்டபடி நாங்கள் செயல்பட்டவர்கள் இன்று வரை கட்சி விசுவாசம் இருக்கிறோம் இதனால்தான் எனக்கு இந்த பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். இவரைப் போல அவ்வப்போது பச்சோந்தியாக மாறுவது கிடையாது.
செங்கோட்டையனை பொறுத்தவரை எப்போதும் அவர் சட்டமன்றத்தில் திமுகவை எதிர்த்து பேசியது கிடையாது. பொதுக்கூட்டத்திலும் பேசியது கிடையாது. ஆக அவர் திமுகவிற்கு பி டீம் என்பது நிரூபணம் ஆகிவிட்டது நிரூபணம் ஆகி உள்ளது. கட்சியில் இருந்து செங்கோட்டையினை நீக்கியதால் நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் இனிப்பு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர் இயக்கத்திற்கு துரோகம் செய்திருக்கிறார். இந்த இயக்கம் சாதாரண இயக்கம் அல்ல 2 1/2 கோடி தொண்டர்களின் இயக்கம் வேண்டும் என்று திட்டமிட்டு இந்த இயக்கத்தை முடக்கவோ அவதூறு பேசியும் இயக்கத்தை பலவீனப்படுத்த யார் முற்பட்டாலும் இந்த இயக்கம் வேடிக்கை பார்க்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.