Ankit Tiwari: லஞ்சம் பெற்று சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி; சிக்கிய ஆவணங்கள்; லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்.!

By vinoth kumar  |  First Published Dec 2, 2023, 7:31 AM IST

அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயர் அதிகாரிகளுடன் பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம்தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார். 


அரசு மருத்துவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் அது குறித்த விசாரணை அமலாக்கத்துறையிடம் வந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை முடித்து தருவதாகக் கூறி அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கிட் திவாரி என்பவர் 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.  இது குறித்து மருத்துவர்  ஏற்கனவே  லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சினிமா பாணியில் விரட்டி சென்று அமலாக்கத்துறை அதிகாரி  அங்கிட் திவாரியை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவரை நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த விஜிலென்ஸ்.. தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கா? இல்லையா?

இந்நிலையில், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மதுரை அமலாக்கத்துறை  அதிகாரியாக அங்கித் திவாரி பணியாற்றி வருகிறார். கடந்த அக்டோபர் 29-ம் தேதி திண்டுக்கல்லில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர் ஒருவரை அங்கித் திவாரி தொடர்பு கொண்டு அவர் மீதான ஏற்கனவே முடித்துவைக்கப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கு குறித்து பேசியுள்ளார். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கின் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அக்டோபர் 30ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

அதன்படி அந்த அரசு ஊழியர் மதுரைக்கு சென்றபோது, அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்று பேரம் பேசியுள்ளார். பின்னர் தனது உயர் அதிகாரிகளுடன் பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் மட்டும் தந்தால் போதும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம், அந்த அரசு ஊழியர் வழங்கியுள்ளார்.

பின்னர் மீதமுள்ள பணத்தை தரவேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், தொடர்ந்து வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமும் மிரட்டியுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர் கடந்த மாதம் 30-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நேற்று காலை 10.30 மணிக்கு அரசு ஊழியரிடமிருந்து அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டபோது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் அவர் கையும், களவுமாக பிடிபட்டார். இவரது முறைகேடுகள் தொடர்பாக சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  இதேபோன்று வேறு யாரிடமாவது பணம் வசூலித்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரை அமலாக்கத்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் விடிய விடிய சோதனை நடைபெற்று வருகிறது. 

click me!