#BREAKING: கூட்டணி முறிவும்; அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையும்!!

By vinoth kumar  |  First Published Mar 21, 2024, 8:50 AM IST

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மணல் குவாரிகள், கட்டுமான நிறுவனங்கள்,  அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மணல் குவாரிகள், கட்டுமான நிறுவனங்கள்,  அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் விசிக துணைப் பொதுச்செயலாளரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருகனுமான ஆதவ் அர்ஜுனா வீடு உள்ளிட்ட சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  கேட்டதை கொடுத்த தேர்தல் ஆணையம்.. குஷியில் டிடிவி.தினகரன்.. இந்த முறையாவது விசிலடிக்குமா குக்கர்?

இந்நிலையில்,  நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை ஆளுங்கட்சிக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் 4 கார்களில் வந்த 8க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் மீது குட்கா வழக்கு, சொத்து குவிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க:   ஒரே ஒரு தொகுதி.!தாமரை சின்னத்தில் தான் போட்டி.!உறுதியாக நிற்கும் பாஜக.?கெத்து காட்ட முடியாமல் தவிக்கும் ஓபிஎஸ்

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுவது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

click me!