சட்டப்பேரவையில் எதிரொலித்த எம்புரான் பட சர்ச்சை! முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்!

எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. 


எம்புரான் திரைப்படம் மார்ச் 27ம் தேதியன்று வெளியானது. பிருத்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தத் திரைப்படத்தில் முல்லை பெரியாறு பற்றி சர்ச்சையான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தது. அதை நீக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இறுதியில், மறு எடிட்டிங்கிற்காக அனுப்பப்பட்ட திரைப்படத்தில் 24 காட்சிகள் நீக்கப்பட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இதையும் படிங்க: எம்புரான் பட தயாரிப்பாளர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய திடீர் ரெய்டு!

Latest Videos

எம்புரான் திரைப்படம் சர்ச்சை

இந்நிலையில் எம்புரான் பட சர்ச்சை தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது எம்புரான் திரைப்படம் தொடர்பாக  தவாக கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை பேராபத்தை விளைவுக்கும் அணை எனவும், அந்த அணை உடைந்தால் கேரளம் அழியும் என்ற காட்சி இடம்பெற்றிருப்பதாகவும், அத்திரைப்படம் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வருவதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு முடிவுக்கட்ட ஸ்டாலின் திட்டம்.! சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் - தேதி குறித்த தமிழக அரசு

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்புரான் திரைப்படத்தை பார்க்கவில்லை என்றாலும், அதனை பார்த்தவர்கள் சொல்வதை கேட்கும் போது கோவமும் பயமும் வருவதாக கூறினார். இப்படிப்பட்ட நிகழ்வை திரைப்படத்தில் பதிவு செய்திருந்தால் அவை தேவையற்றது எனவும் துரைமுருகன் கூறினார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்சாரில் கட் செய்யப்படாத காட்சிகள், தற்போது கிளம்பிய எதிர்ப்புகளுக்கு பின் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

click me!