விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

By Velmurugan sFirst Published Mar 30, 2024, 4:50 PM IST
Highlights

மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு சுமார் 20 நாட்களே உள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்வதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. அதன்படி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னம் இறுதி செய்யப்படாமல் இருந்தது.

கடந்த முறை கோ பேக் மோடி, இந்த முறை கெட் அவுட் மோடி; புதிய டிரெண்டை உருவாக்கும் உதயநிதி

இந்நிலையில், விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தனித் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களை முறையிட்டு தங்களுக்கு தேவையான சின்னத்தை கோருங்கள், மற்ற கட்சியினரின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மாவட்ட தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னையில் மீண்டும் பிரதமர் மோடியின் பிரமாண்ட ரோட் ஷோ; அண்ணாமலை அறிவிப்பு

அதன்படி சிதம்பரம் தொகுதியை உள்ளடக்கிய அரியலூர் மாவட்ட ஆட்சியர் இன்று பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மற்ற கட்சிகள் அச்சின்னத்திற்கு உரிமை கோராத நிலையில் சின்னம், விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று விழுப்புரம் தொகுதியிலும் ரவிக்குமாருக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!