கடந்த முறை கோ பேக் மோடி, இந்த முறை கெட் அவுட் மோடி; புதிய டிரெண்டை உருவாக்கும் உதயநிதி

By Velmurugan sFirst Published Mar 30, 2024, 4:02 PM IST
Highlights

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விழுப்புரத்தில் நடந்த பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விசிக வேட்பாளர் ரவிகுமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், இது பிரசாரக்கூட்டமா அல்லது வெற்றி விழா? என்று கேள்வி கேட்கும் வகையில் மக்கள் வந்துள்ளனர். வாக்கு சேகரிக்க தான் வந்தேன். ஆனால் என்னை விட நீங்கள் தான் மிகுந்த ஆர்வமாக இருக்கீர்கள். 

பானை சின்னத்தை வேண்டுமென்றே முடக்கி வருகின்றனர். சின்னம் கிடைத்தாலே நமக்கு பாதி வெற்றி. ரவிக்குமாருக்கு வாக்களிக்கும் வாக்கு மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த முறை கோ பேக் மோடி என்றோம் இந்த முறை கெட் அவுட் மோடி என்று சொல்ல வேண்டும். குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அப்படி செய்தால் நான் வாரம் இருமுறை இந்த விழுப்புரத்திற்கு வந்து உங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபடுவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். 

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு; போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த பகீர் சம்பவம்

எனவே நீங்களும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறி திமுக ஆட்சியில் விழுப்புரத்திற்கு செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் மு.க.ஸ்டாலின் சொல்வதை தான் செய்வார். அவர் அளித்த வாக்குறுதிகளை நிச்சியமாக நிறைவேற்றி தருவார். 

மு.க.ஸ்டாலின் யாருடைய காலைப் பிடித்தும் முதல்வராக வரவில்லை. நான் பாதம் தாங்கி பழனிச்சாமியை குறிப்பிடுகிறேன். கோவிட் தொற்றின்போது எந்த வித உதவியையும் செய்யாமல் தட்டை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்றது தான் மோடி செய்தது. கோவிட் தொற்றின்போது தமிழக முதல்வர் தானும் தடுப்பூசியை போட்டுக்கொண்டு, மருத்துவமனைக்கு சென்று நோயை தடுக்கும் பணியில் ஈடுபட்டார். 

கடும் நிதிநெருக்கடியிலும் ஆட்சிக்கு வந்த முதல் நாளே மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்தினார். இத்திட்டத்தால் 460 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தான் இத்திட்டத்தின் வெற்றி திராவிட மாடல். திமுக ஆட்சியில் பெண்களுக்காக இயற்றப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற நலத்திட்டங்களை பட்டியலிட்டார். 

தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களான காலை உணவுத் திட்டம், மாணவர்களுக்கான கல்வித் தொகை போன்றவற்றை செயல்படுத்தினார். திராவிட மாடலின் திட்டங்களை மற்ற மாநிலங்களை பின்பற்றி வருகின்றனர். இந்த தேர்தல் முடிந்தபிறகு மகளீர் உரிமைத் தொகையில் விடுபட்ட பெண்களுக்கும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். பிரதமர் மோடியும் பாதம்தாங்கி பழனிச்சாமியும் மதுரைக்கு வந்து ஒரே ஒரு கல்லை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை என்று சொல்லி விட்டு சென்றனர். 

அசுர வேகத்தில் பாய்ந்த காரை மடக்கி பிடித்த அதிகாரிகள்; மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்

நானாவது எய்ம்ஸ் மருத்துவமனை கல்லைக்காட்டினேன். ஆனால் பழனிச்சாமி பல்லைக்காட்டினார். பிரதமரை பார்த்து சிரிக்கக் கூடாதா என்று பழனிச்சாமி கேட்கிறார். நான் பிரதமரை சந்தித்துப் போது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக்கேட்டேன் அடுத்த முறை செஸ் விளையாட்டுப் போட்டியின் பாராட்டு விழாவிற்கு வந்தார். 

தமிழ்நாட்டின் இயற்கை பேரிடரில் ஒன்றிய அரசு ஒரு பைசாக்கூட கொடுக்கவில்லை. ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று அண்ணா கூறினார். அவரின் பெயர் ஆர்.என்.ரவி இல்லை ஆர்.எஎஸ்.எஸ்.ரவி., சங்கி ரவி.‌வின்னர் பட வடிவேலுவை போல சட்டமன்றத்திற்கு வந்து அம்பேத்கர், பெரியார், அண்ணாவின் பெயரை மறுத்தார். உடனே கைப்புள்ள ஆளுநர் ஓடிவிட்டார். அமைச்சர் பொன்முடி வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஆளுநரை மிகவும் கடுமையாக கண்டித்தது. பதவியேற்பு விழாவில் ஆளுநரிடமே பிரச்சாரத்திற்கு செல்கிறேன் என்று கூறி வாழ்த்தும் பெற்றார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பேசினார்.

click me!