மது ஒழிப்பிற்காக போராடிவரும் மருத்துவ ராமதாஸ்க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வேல்ஸ் பல்கலைகழக நிறுவனர் ஐசரி கணேஷ் வேண்டுகோள்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூரில் உள்ள மருத்துவர் இராமதாஸ் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11 மற்றும் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு மருத்துவர் இராமதாஸ் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ஸ்ரீகாந்தி பரசுராமன் முன்னிலை வகித்தார்.
சென்னை, வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் ஐசரி கே.கணேஷ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
undefined
எம்எல்ஏ To எம்.பி. ஆக வேண்டும்; திருச்செந்தூரில் சிறப்பு யாகம் வளர்த்து நயினார் நாகேந்திரன் வழிபாடு
சிறப்புரையாற்றிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் மருத்துவர் ஐயாவும், நாங்களும் உள்ளோம். எனவே எப்படியாவது இந்த மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மேலும் தொழிலிலும் பின்தங்கிய மாவட்டம், வேலைவாய்ப்பு இல்லாத மாவட்டம், தனி நபர் வருமானத்திலும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. ஆனால் ஒன்றில் மட்டும் முதல் மாவட்டமாக உள்ளது. அது டாஸ்மாக் விற்பனை. இதனால் மனதிற்குள் அவ்வளவு வருத்தங்கள் உள்ளன. இதெல்லாம் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த மண்ணை தேர்வு செய்து இங்கு இருந்த கருவேலை மரங்கள் ஆகியவற்றை அகற்றி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்லூரிகளை கட்டி உள்ளார்கள்.
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பசுமை நிறைந்த கல்லூரி வளாகமாக இந்த கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மருத்துவர் ஐயா அவர்கள் வைத்த லட்சக்கணக்கான மரங்கள் தற்போது பூத்து குலுங்கி உள்ளன. இந்தியாவிலேயே அதிக பனை மரங்கள் நிறைந்த கல்லூரி வளாகமாக உள்ளது. இந்த அருமையான சூழலை பயன்படுத்தி நீங்கள் மிகச் சிறந்த முறையில் கல்வி பயின்று பெற்றோருக்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும், உலக அளவிலும் பெருமை சேர்க்க வேண்டும்.
TTV Dhinakaran: தேனி தொகுதியில் களம் காண்கிறார் டிடிவி தினகரன்; ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஒரு ஆண்டுக்கு திட்டமிட்டால் நெல்லை பயிரிடுங்கள், 10 ஆண்டுகளுக்கு திட்டமிட்டால் மரங்களை நடுங்கள். நூறாண்டுகளுக்கு திட்டமிட்டால் கல்வியை கொடுங்கள். அதிலும் பெண்களுக்கு கல்வியை கொடுங்கள். அது ஒரு குடும்பத்தயே காக்கும், மேலும் இதோடு நீங்கள் உங்கள் கல்வியை நிறுத்திக் கொள்ளக்கூடாது. அதிகம் படிக்க வேண்டும் என்றார்.
இதனை் தொடர்ந்து பேசிய ஜசரி கணேஷ் கூறியதாவது, நான் கல்லூரி பயிலும் போதே என் தந்தையை இழந்து விட்டேன். அதன் பிறகு மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். என் தந்தை இறப்பிற்கு பிறகு பல்வேறு பட்டப்படிப்புகளை படித்துள்ளேன். எவ்வளவு படிப்புகள் படித்தாலும் நான் என்னை வேந்தன் என்று கூறிக் கொள்வதை விட ஒரு மாணவன் என்று கூறிக் கொள்வதையே விரும்புவேன். அதையே பெருமையாக நினைக்கிறேன்.
நான் கல்லூரி காலத்தில் வெறும் ஆவரேஜ் ஸ்டூடண்ட் தான். 50 சதவீத மதிப்பெண்கள் கூட எடுத்ததில்லை. ஆனால் தற்போது நான் 43 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறேன். இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறேன். இதன் காரணமாகவே இன்று என்னை இங்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளார்கள்.
எனக்கு தந்தை கிடையாது எனக்கு தந்தை என்று கருதுவது மருத்துவர் ஐயாவை தான். அவருடைய வழியிலேயே நான் பின்பற்றி வந்துள்ளேன். இதன் காரணமாகவே நான் என் வாழ்நாளில் இதுவரை ஒரு முறை கூட புகை பிடித்தது கிடையாது, மதுவை சுவை பார்த்தது கூட கிடையாது. மதுவை ஒழிக்க போராடிவரும் மருத்துவர் ஐயாவை கௌரவிக்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். எனவே அதற்கு உண்டான வேலையை நாம் அனைவரும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.