கள்ளகுறிச்சி தொகுதியில் சஸ்பென்ஸ் வைத்த இ.பி.எஸ்., ஒரே விளம்பரத்தில் மொத்தமாக உடைத்த எம்எல்ஏ

By Velmurugan s  |  First Published Mar 21, 2024, 10:02 AM IST

கள்ளகுறிச்சி பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போது வரை வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், சுவர் விளம்பரம் மூலம் அதிமுக எம்எல்ஏ வேட்பாளரின் பெயரை அறிவித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில், ஆத்தூர், கெங்கவல்லி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் இருந்து, அ.தி.மு.க., சார்பில் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலர் உள்பட மொத்தம் 53 பேர், விருப்ப மனு அளித்தனர். தவிர, 15 பேர், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் மனு அளித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதில், முக்கிய நிர்வாகிகள் ஆறு பேரை, பொதுச் செயலர் பழனிசாமி நேர்க்காணலுக்கு அழைத்து பேசியுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுமோ என்ற சந்தேகமும் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க.,வினர், தேர்தல் பணிகளில் வேகம் காட்டாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியத்தில் நடந்த அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட செயலர் குமரகுரு பேசுகையில், ‘கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்கவில்லை எனில், அ.தி.மு.க.,வின் வேட்பாளராக நானே நிற்பேன். அனைவரும் தேர்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும்’ என, பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. அதிர்ச்சியில் இபிஎஸ்!

இதுகுறித்து, கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலர் குமரகுருவிடம் கேட்டபோது, ‘கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில், அ.தி.மு.க., தொண்டர் ஒவ்வொருவரும் வேட்பாளர் என்று நினைத்து தேர்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும். நானே வேட்பாளர் என்று, தொண்டர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் பணிகள் செய்ய வேண்டும் என்ற வகையில் தான் பேசினேன். நான் வேட்பாளர் என்று கூறவில்லை; கட்சி தலைமை தான் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடும்’ இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே ஒரு தொகுதி.!தாமரை சின்னத்தில் தான் போட்டி.!உறுதியாக நிற்கும் பாஜக.?கெத்து காட்ட முடியாமல் தவிக்கும் ஓபிஎஸ்

அ.தி.மு.க., மாவட்ட செயலரின் பேச்சு குறித்த வீடியோ, அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருக்க கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அதிமுக கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் குமரகுரு என ஊர் முழுவதும் சுவர் விளம்பரம் மூலம் தெரியப்படுத்தி வருகிறார்.

click me!