மயானக்கொள்ளை ஊர்வலத்தில் பாமக, விசிகவினர் மோதல்; ராமதாஸ் வீட்டருகே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

Published : Mar 09, 2024, 10:29 PM IST
மயானக்கொள்ளை ஊர்வலத்தில் பாமக, விசிகவினர் மோதல்; ராமதாஸ் வீட்டருகே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

சுருக்கம்

திண்டிவனம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் பாமக, விசிக.வினர் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - செஞ்சி சாலையில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த வருடமும் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக அம்மன், காளி வேடமணிந்து அங்காளம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு திண்டிவனம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மயான கொள்ளை இடத்தை அடைந்தனர். 

இந்த நிலையில் ஊர்வலமாக செல்லும்போது காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசின் இல்லம் இருக்கும் இடத்தின் வழியாக விசிகவை சேர்ந்த சிலர் செல்லும்போது விசிக கொடி கட்டிய வேல் கொண்டு நடனம் ஆடியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த பாமகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. 

ஓட்டு போட்ட மக்களுக்கு தலைகுணிவை ஏற்படுத்தியவர் ஆ.ராசா; 2ஜி வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு - எல்.முருகன்

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் இரு தரப்பினரிடமும் பேசுவார்த்தை நடத்தினார். 

போதைப் பொருளை கடத்துவதற்காகவே அயலக அணி என்ற ஒரு அணியை உருவாக்கிய கட்சி திமுக - பாஜக குற்றச்சாட்டு

இருப்பினும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட முயன்றதால் காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். காவல் துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞர்கள் சிலர் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மரக்காணம் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய தடியால் திண்டிவனம் மயானக் கொள்ளை திருவிழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐயோ! இதுக்கா உன்ன டாக்டருக்கு படிக்க வச்சேன்! எங்களை விட்டு போயிட்டியே! அமிர்த வர்ஷினி முடிவுக்கு இதுதான் காரணமா?
100 கி.மீ வேகம்! குறுக்கே வந்த வாகனம்! சுக்கு நூறாக நொறுங்கிய KTM பைக்! இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!