மணிக்கணக்கில் காத்திருந்து பலாப்பழத்தை பறித்துச் சென்ற ஓபிஎஸ்; துரை வைகோவுக்கு தீப்பெட்டி ஒதுக்கீடு

By Velmurugan sFirst Published Mar 30, 2024, 6:32 PM IST
Highlights

ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு. இதே போன்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு.

அதிமுகவில் இருந்து தனி அணியாக செயல்படும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது என முடிவு செய்து பாஜக கூட்டணியில் அங்கம் பெற்றுள்ளார். பாஜக கூட்டணியில் பன்னீர்செல்வம் பாஜக.வின் தாமரை சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த தேர்தலில் நானே போட்டியிடுகிறேன் என்று கூறி ராமநாதபுரத்தில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால் சுயேட்சை வேட்பாளர்களுக்கு அவரவர் கோரிக்கைக்கு ஏற்ப சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்டி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாளி, பலாப்பழம், திராட்சை பழம் என 3 சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு கோரப்பட்டது. அதே தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிடும் மற்றொரு சுயேட்சை வேட்பாளர் வாளி சின்னத்திற்கு உரிமை கோரியதால் அச்சின்னம் முன்னுரிமையின் அடிப்படையில் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கான சின்னத்தை உறுதி படுத்துவதற்காக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். அதன் பின்னர் அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். 

கடந்த முறை கோ பேக் மோடி, இந்த முறை கெட் அவுட் மோடி; புதிய டிரெண்டை உருவாக்கும் உதயநிதி

இதே போன்று திமுக கூட்டணியில் இடம் பெற்று திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக.வின் முதன்மைச் செயலாளர் துரைவைகோ பம்பரம் சின்னம் கேட்டு தொடர்ந்து போராடி வந்த நிலையில் அவருக்கு தீப்பெட்டி சின்னத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

click me!