மீண்டும் நீங்கள் தான் முதலமைச்சராக வருவீங்கள், உங்கள் ஆட்சி சிறப்பாக உள்ளது என நடை பயிற்சியின் போது முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி பேசிய பெரியவரின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
திமுகவும் தேர்தல் களமும்
தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சி அதிகாரத்தை இழந்த திமுக, மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பிறகே ஆட்சியை பிடிக்க முடிந்தது. இந்த காலகட்டத்தில் திமுகவில் பல்வேறு சரிவுகளை சந்தித்தது. சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்கட்சியாக கூட வரமுடியாத அளவிற்கு தோல்வியை தழுவியது.
இதனையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 40க்கு 40 தோல்வியை தழுவியது. இதனையடுத்து மீண்டும் 2019ஆம் ஆண்டிற்கு பிறகே திமுகவிற்கு வெற்றியானது வசமானது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி,சட்டமன்ற தேர்தலில் வெற்றி, உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி, வெற்றி என அடுத்தடுத்து ஏறுமுகமாக உள்ளது.
திமுக அரசின் திட்டங்கள்
இதனை தொடர்ந்து ஆட்சி பிடித்த திமுக தேர்தல் வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறுது. குறிப்பாக பேருந்தில் மகளிர்களுக்கு இலவச பயணம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், பால் விலை குறைப்பு, வீடு தேடி கல்வி, மருத்துவம் என திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருந்த போதும் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம், ஊழல், விவசாய நிலங்கள் அபகரிப்பு புகார்கள் கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழக்கம் போல் சென்னை ஐஐடியில் நடை பயிற்சி மேற்கொண்டார்.
சிறப்பா ஆட்சி செய்யும் நீங்க தான் அடுத்த முறையும் முதலமைச்சரா வருவீங்க...
திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டும் பெரியவர். pic.twitter.com/U4BAdO8Gmf
வாழ்த்து தெரிவித்த முதியவர்
அப்போது முதியவர் ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்து ராமர் இருக்கிற காலத்தில் ராமரை குற்றம் சொன்னார்கள், நல்லா பன்னூட்டு இருக்கேள், அப்பா மாதிரி பன்னுங்கோ, நீங்க தான் திருப்பி வருவேள் கவலைப்பட வேண்டாம் . இதே மாதிரி பன்னுங்கோ., சொல்லுறவன் சொல்லிட்டு போறாள் யார் வாயையும் அடக்க முடியாது. உடல்நிலை பார்த்துக்கொள்ளுங்கள் என முதியவர் தெரிவிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்