நடிகையும், முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்திருந்த நிலையில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
நடிகை ஜெயப்பிரதாவும் சினிமாவும்
இந்திய சினிமாவில் 70 மற்றும் 80களில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை ஜெயபிரதா. தெலுங்கு திரைப்படமான பூமி கோசம் என்ற திரைப்படத்தில் 3 நிமிட நடன காட்சியில் அறிமுகமான ஜெயப்பிரதா, 1976 ஆம் ஆண்டு பாலச்சந்திரனின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினி கமல் ஆகியோருடன் இணைந்து நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி,தசாவதார போன்ற படத்தில் ஜெயப்பிரதா நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு ஹிந்தி என பழமொழிகளில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை மகிழ்வித்தவர் ஜெயப்பிரதா,
அரசியலில் ஜெயப்பிரதா
இதனை தொடர்ந்து அரசியில் களம் இறங்கியவர், தெலுங்கு தேசத்தில் கட்சியில் இணைந்து செயல்பட்டார். சிறிது நாட்களுக்கு பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார். பரபரப்பாக சினிமா மற்றும் அரசியிலில் ஈடுபட்ட ஜெயப்பிரதா சென்னை ராயப்பேட்டையில் ஜெயப்பிரதா என்னும் திரையரங்கத்தையும் நடத்தி வந்தார். ஆரம்ப கால கட்டத்தில் திரையரங்கம் கூட்டம் அதிகரித்து வந்த நிலையில், காலம் செல்ல, செல்ல திரையரங்கில் வருமானம் குறைய தொடங்கியது. இதனையடுத்து திரையரங்கம் சொத்து பிரச்சனையால் மூடப்பட்டது.
ஜெயப்பிரதாவுக்கு சிறை தண்டனை
நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை. இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது.
5ஆயிரம் அபராதம்
இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றம் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயப்பிரதா தரப்பில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்திவிடுவதாக தெரிவித்தார். இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
நான் பேசியதைத்தான் பிரதமரும், ஒன்றிய அமைச்சர்களும் திரித்து கூறுகிறார்கள் - எ.வ.வேலு விளக்கம்!