செங்கல்பட்டில் அதிக வேகத்தில் வந்த டிப்பர் லாரி.. சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதி விபத்து.. 6 பேர் பலி

Published : Aug 11, 2023, 11:06 AM ISTUpdated : Aug 11, 2023, 11:11 AM IST
செங்கல்பட்டில் அதிக வேகத்தில் வந்த டிப்பர் லாரி.. சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதி விபத்து.. 6 பேர் பலி

சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அதிக வேகத்தில் வந்த டிப்பர் லாரி சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது.

செங்கல்பட்டில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அதிக வேகத்தில் வந்த டிப்பர் லாரி சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது.

இதையும் படிங்க;- அனைத்து குடும்ப தலைவிக்கு ரூ.1000 கொடுக்கிறேன் சொல்லிட்டு இப்படி அந்தர் பல்டி அடிக்கலாமா? இறங்கி அடிக்கும் EPS

 இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதையும் படிங்க;-  Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து  காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!