திருமுருகன் காந்திக்கு ஜாமீன் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

 
Published : Jun 01, 2017, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
திருமுருகன் காந்திக்கு  ஜாமீன் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

egmore court charges bail on thirumurgan gandhi

பணமதிப்பு ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய வழக்கில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த நவம்பர் மாதம் பணமதிப்பு ரத்தை எதிர்த்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மே 17 இயக்கத்தினர் திருமுருகன் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.

இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்  திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து தேனாம்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்கும், கடந்த நவம்பர் மாதம் பணமதிப்பு ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதாகவும் திருமுருகன் காந்தி இன்று காலை கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.

இந்நிலையில், பணமதிப்பு ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய வழக்கில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

திரும்பத் திரும்ப அவமானம்..! பாஜக சவகாசமே வேண்டாம்..! ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..!
விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?