எடப்பாடி பழனிசாமியின் 50 ஆண்டுகால அரசியல் பயணம்; ஜெயலலிதாவைப் போன்று சாதிப்பாரா?

By Dhanalakshmi G  |  First Published Feb 23, 2023, 4:30 PM IST

ஈபிஎஸ் என்று அழைக்கப்படும் எடப்பாடி கே பழனிசாமிதான் அதிமுகவின் முகவரி என்ற  உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்பாக வந்து இருக்கிறது. இந்த தீர்ப்பினால் திமுகவை களத்தில் வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


எடப்பாடி பழனிசாமி ஜூலை 11, 2022-ல், இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து இரட்டை தலைமையாக செயல்பட்டு வந்த ஓ. பன்னீர்செல்வம் சட்டப் போராட்டத்தில் இறங்கினார். ஓபிஎஸ் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம், இவருக்கு முன்பு இந்த பொறுப்பை வகித்து வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார்.  ஈபிஎஸ் விரைவில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்படலாம். 

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவில் பழனிசாமி நீண்ட பயணம் மேற்கொண்டு இருக்கிறார். 

Tap to resize

Latest Videos

1974 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பழனிசாமி, படிப்படியாக உயர்ந்து கட்சியின் இடைக்காலத் தலைவராகவும், மாவட்டச் செயலர், கட்சியின் தலைமையகச் செயலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இவர் கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். 1989ல், நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவைத் தொடர்ந்து கட்சி பிளவுபட்டபோது, மறைந்த ஜெயலலிதாவுக்கு தனது ஆதரவைக் காட்டினார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓபிஎஸ்-இபிஎஸ் உச்சக்கட்ட மோதல்.! பொதுக்குழு தொடங்கி உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரை அதிமுகவில் நடந்தது என்ன..?

அந்த நேரத்தில், பன்னீர்செல்வம் எதிர் அணியில் இருந்தார். இதை சுட்டிக்காட்டிய பழனிசாமி, நீக்கப்பட்ட தலைவர் அம்மாவுக்கும் (ஜெயலலிதா) கட்சிக்கும் விசுவாசமாக இல்லை என்று கூறியிருந்தார்.

1991ல் மீண்டும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமி, 2011ல் அமைச்சரானார்.

மீண்டும் 2016ல், ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றதுடன், அவரால் முக்கியத்துவம் பெற்ற தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார்.  

68 வயதான பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. 1998ல் மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பழனிசாமியின் அரசியல் வேகம் சூடுபிடித்தது. ஜெயலலிதா அவருக்கு முன்பு இருந்த நெடுஞ்சாலை துறையுடன் ணைத்து முக்கியமான பொதுப்பணித் துறையையும் வழங்கினார்.

2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பன்னீர்செல்வத்தின் போராட்டத்துக்குப் பின்னர், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பழனிசாமி, தன்னை முதலமைச்சராக தேர்ந்தெடுத்த சசிகலாவின் பக்கம் நின்றார்.

துரோக சக்திகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் பதிலடி கொடுப்போம்..! இபிஎஸ்யை அலறவிடும் டிடிவி தினகரன்

பழனிசாமி தனது நிலையை உறுதிப்படுத்த கடுமையாக உழைத்தார் மற்றும் கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு திறமையான நிர்வாகியாக தன்னை நிரூபித்தார். 

எளிமையான பின்னணியில், விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த தலைவராகவும், தேர்தல் பிரச்சாரங்களில் விவசாயிகள் பயன்படுத்தும் பச்சைத் துண்டு தலைப்பாகையில் அடிக்கடி தோன்றி பழனிசாமி தனது பிம்பத்தை கவனமாக கட்டமைத்துக் கொண்டார். 

தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கட்சிப் பதவிகளில் இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில், தி.மு.க.வை 'வாரிசு அரசியல்'' என்று குறிவைத்தார்.

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது கூட, மக்களை அதிகளவில் எடப்பாடி பழனிசாமி கவர்ந்து இருந்தார்.

அ.தி.மு.க., ஆட்சியை இழந்தாலும், பழனிசாமியின் சொந்த மண்ணான கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றது. இது கட்சியில் தனது நிலையை மேலும் உறுதிப்படுத்த அவருக்கு உதவியது.

அப்போதிருந்து, தன்னை கட்சியின் தலைவராக கட்டமைத்துக் கொள்வதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினார். கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்தார். இறுதியில் பொதுக்குழு கூட்டி, தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக அறிவித்துக் கொண்டார். 

மறுபுறம், 2021 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களிலும், பன்னீர்செல்வத்தின் சொந்த இடமான தேனி மண்டலத்திலும் கட்சியின் செயல்பாடு மோசமாக இருந்தது.

பொதுக்குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பன்னீர் செல்வம் சட்டமன்ற துணைத் தலைவராக பொறுப்பை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதே நேரத்தில் பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை.. எப்படி இருக்குமோ என பயந்தேன்.. எடப்பாடி பழனிசாமி..!

பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும், மக்களவை எம்.பியுமான பி.ரவீந்திரநாத் பல சந்தர்ப்பங்களில் திமுகவை பாராட்டி பேசி இருந்தனர். கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொதுக்குழு கூடியபோது, அந்தக் குழுவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதற்கும் இதுவும் முக்கிய காரணமாக இருந்தது. 

பன்னீர்செல்வத்தை பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் விசுவாசத்தை மறந்து தயங்காமல் எடப்பாடி பழனிசாமி பின்னர் சென்றனர். எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. 

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட பின்னர் சிறைக்குச் சென்றார். திரும்ப வந்த பின்னரும் கட்சியின் பெரிய தலைவர்கள் யாரும் அவர் பின்னால் செல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியை தனது தலைவராக தேர்வு செய்தனர். சசிகலாவை ஓபிஎஸ் வெளிப்படையாக  எதிர்க்கவில்லை. ஆனால், எந்த நேரத்திலும், சமயத்திலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி விட்டு வைக்கவில்லை.

தீவிரமாக சசிகலா மட்டுமின்றி, டிடிவி தினகரனையும் எதிர்த்தார். அப்போதுதான் தன்னை கட்சியில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதை அறிந்து இருந்தார். இதற்கும் மேல், ஜெயலலிதா இல்லாமல், நான்காண்டுகள் திறமையாக ஆட்சி செய்து, கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்து இருந்தார். இதுவும் அவருக்கு பெரிய அளவில் வலுவைக் கொடுத்தது. ஆனாலும், தீர்ப்பு ஒரு சார்பாக வந்து இருந்தாலும், ஜெயலலிதா போன்று திறமையான ஆளுமையை பழனிச்சாமியால் கொடுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!