மதுரையில் 18 ரயில் நிலையங்களுடன் 31கி.மீட்டருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.!75 நாட்களில் அறிக்கை- மெட்ரோ நிர்வாகம்

Published : Feb 23, 2023, 04:09 PM IST
மதுரையில் 18 ரயில் நிலையங்களுடன் 31கி.மீட்டருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.!75 நாட்களில் அறிக்கை- மெட்ரோ நிர்வாகம்

சுருக்கம்

மதுரையில்  திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையிலான 31 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்கான 75 நாட்களில் விரிவான அறிக்கை தயார் செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோவுக்கு பொதுமக்கள் வரவேற்பு

சென்னை மெட்ரோ இரயில் பொதுமக்களின் வரவேற்ப்பை பெற்றதையடுத்து திட்டத்தை மதுரை மாநகரிலும் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் திட்ட இயக்குநர் அர்சுனன் மேலும் கூறுகையில், மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக விரைவு போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்க்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது.

மதுரையில் 18 ரயில் நிலையங்கள்

இதன் முதல் கட்டத் திட்டம் 18 இரயில் நிலையங்களுடன் 31 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையிலான போக்குவரத்து திட்டமாகும். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறுவனம் இறுதி செய்த பின்னர் இதற்கான அறிக்கையை தயாரிக்க முடியும். அவ்வாறு இறுதி செய்யப்பட்ட ஆலோசனை நிறுவனம் மூலம் 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

75 நாட்களில் அறிக்கை

மேலும் இரயில் நிலைய வகை செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, சமூக மற்றும் பொருளாதார விவரங்கள் இந்த அறிக்கையில் அடங்கும். எனவே இறுதியான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறுவனம் இறுதி செய்த பின்னரே 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் மெட்ரோ திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

102 மொய் கவுண்டர்கள்; எடப்பாடி தலைமையில் நடைபெற்ற 51 ஜோடிகளுக்கான சமுதாய திருமணம்
 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!