சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர்கள் 17 மணி நேர பயணத்திற்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பினர். 286 நாட்களாக விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸின் தைரியத்தை எடப்பாடி பழனிசாமி பாராட்டினார்.
Sunitha Williams: Edappadi Palaniswami's inspirational wishes for achievement சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட விண்கலம் சுமார் 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்து. இன்று அதிகாலை வந்தடைந்தது. முன்னதாக டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த போது சுமார் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் நிலத்தை நோக்கி கொண்டிருந்தது. பின்னர் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் பாரசூட்கள் விரிந்து வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
இதனையடுத்து டிராகன் விண்கலம் மூலம் 17 மணி நேரம் பயணித்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இதனையடுத்து விண்கலத்தில் இருந்து வெளியே வந்த 4 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிகழ்வை அமெரிக்காவின் நாசா நேரடி ஒளிபரப்பு செய்தது, இந்த வரலாற்று நிகழ்வுகளை பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவாக்கம்
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து, நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோரின் ஆகியோரின் மீள்தன்மைக்கு எனது சல்யூட் என தெரிவித்துள்ளார். மேலும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார்.
பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல்
அவரது பயணம் விண்வெளி ஆய்வு மட்டுமல்ல,பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது என குறிப்பிட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரராக, அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும் எனவும் நான்கு பேர் கொண்ட குழு - கிரூவ்9 உங்களை நமது வீட்டிற்கு வரவேற்கிறோம். உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.