தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பதவியிலிருந்து தர்மசெல்வன் நீக்கம்!

DMK District Secretary Dharmaselvan : ஒரு மாதத்திற்குள்ளாக திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து தர்மசெல்வன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இப்போது ஆ மணி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

Dharmaselvan removed from the post of DMK Dharmapuri East District Secretary in Tamil rsk

DMK District Secretary Dharmaselvan : தமிழக அரசியல் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற நிலையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு திமுக செயலாற்றி வருகிறது. இதனால், எங்கும், எந்த விஷயத்திலும் தவறு நடந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக தர்மசெல்வன் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தான் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக தர்மசெல்வன் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.

அப்படியிருக்கும் போது தர்மசெல்வன் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி என்று அனைவரையும் மிரட்டுவது போன்ற ஆடியோ வெளியாகியிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது ஒரு புறம் இருக்க மற்றொரு சர்ச்சையிலும் தர்மசெல்வன் சிக்கினார். கடந்த சில தினங்களு முன்பு தர்மபுரி கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான டிராவல்ஸ் பங்களாவில் தான் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், நான் பேசுவதையெல்லாம் யாரோ ஒருவர் ரெக்கார்டு செய்து எனக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். அவர்களை நான் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன் என்று எச்சரிப்பது போன்று பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கழக நிர்வாகிகள் கோஷம் எழுப்பி கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

Latest Videos

இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் திமுகவின் அதிரடி நடவடிக்கையாக தர்மசெல்வனை தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கி அவருக்குப் பதிலாக ஆ மணி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். தர்மசெல்வனை பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கிய திமுக பொது செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தர்மசெல்வனுக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினரான ஆ மணி திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாக்கள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

click me!