கதறி அழுத சௌமியா அன்புமணி! 50 ஆண்டுகால கனவு நனவானதாக நெகிழ்ச்சி!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தார். 50 வருடக் கனவு நிறைவேறியதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Sowmiya Anbumani Visits Sabarimala ayyappan temple tvk

உலகப் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து  விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதுவும் கார்த்திகை மாதம் வந்துவிட்டால் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் விரதத்தை துவக்குவது வழக்கம். குறிப்பாக ஆண்டு தோறும் தை மாதம் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். 

அதேபோன்று அனைத்து மாதம் துவக்கத்திலும், நடைதிறப்பது வழக்கமாக உள்ளது. குறிப்பாக மாசி, பங்குனி போன்ற மாதங்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரமுகர்கள் ஏராளமானோர் ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசிப்பது வழக்கமாக உள்ளது. ஆகையால் இந்த மாதங்களில் மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

Latest Videos

அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். 

சபரிமலையில், 18-ஆம் படியேறி சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது. சுவாமியே சரணம் ஐயப்பா..!🙏 | | pic.twitter.com/aRct5U3umM

— Sowmiya Anbumani (@Sowmiyanbumani)

 

இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சௌமியா அன்புமணி 18 படி ஏறுவதற்கு முன்பாக பயபக்தியுடன் மனமுருகி 18 படிகளை வணங்கி, ஆனந்த கண்ணீருடன் ஏறும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.  இதுதொடர்பாக சௌமியா அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சபரிமலையில், 18-ஆம் படியேறி சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது. சுவாமியே சரணம் ஐயப்பா..! என பதிவிட்டுள்ளார். 

click me!