ஸ்டாலினும், ஓபிஎஸ்ம் ஒரே குரலில் பேசுகிறார்கள்…ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு…

Asianet News Tamil  
Published : May 24, 2017, 08:23 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
ஸ்டாலினும், ஓபிஎஸ்ம் ஒரே குரலில் பேசுகிறார்கள்…ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு…

சுருக்கம்

Edappadi palanisamy continue cm for more than 5 years

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ம் இணைந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருவதாக நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும், விரைவில் சட்டமன்றத்துக்கு தேர்தல் வரும் என ஸ்டாலினும், ஓபிஎஸ்ம் தொடர்ந்து ஒரே குரலில் பேசி வருவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

அதிமுக என்னும் பட்டத்து யானையின் பயணத்தை தடுத்து நிறுத்த ஸ்டாலினும், ஓபிஎஸ்ம் திரை மறைவு வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆனால் இவர்கள் இருவரின் கனவும் பலிக்காது என தெரிவித்த சம்பத், தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடரும் என்றும், இதனைத் தொடர்ந்தும் ஜெயலலிதா ஆட்சியே தமிழகத்தில் நடைபெறும் என நாஞ்சில் சம்பத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.. அடித்து சொன்ன ஓபிஎஸ்.. உதயசூரியனில் ஐக்கியமாகும் தேதி இதுவா?
காங்கிரஸுக்கு மூக்கணாங்கயிறு..! ஸ்டாலினின் கடைசி கட்ட பிளான்!