
டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கக்கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹினி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்குவால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உயிரிழந்து வருகின்றனர். அதனால் கிராமம் கிராமமாக சென்று சுகாதாரத்துறை நிலவேம்பு கசாயம் அழிப்பதோடு டெங்குவை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் டெங்கு கட்டுக்குள் இருப்பதாகவும், தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு கூறி வருகின்றது.
ஆனால் சேலத்தில் மட்டும் டெங்குவுக்கு 9 நாட்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ரோகினி கிராமம் கிராமமாக சென்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரோகினி, சேலம் தனியார் மருத்துவமனைகளில் அதிகம் பேர் டெங்குவால் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும் டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.