தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் மழை ! வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !

By Selvanayagam PFirst Published Aug 17, 2019, 8:21 AM IST
Highlights

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், வேலூரில் நேற்று இரவி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போல் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது.


 
இந்நிலையில் சென்னையில் கிண்டி , அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரை மழை பெய்ததது. 

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கனமழை பெய்வதால் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நெல்லை, மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல், தர்மபுரி, தஞ்சாவூர், நாமக்கல் உட்பட 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

click me!