மிக்ஜம் புயல் காரணமாக 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

By SG Balan  |  First Published Dec 3, 2023, 9:58 PM IST

தமிழக அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளைத் திறந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மிக்ஜம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ள நான்கு மாவட்டங்களில் மட்டும் நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளைத் திறந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக்குக் காரணமான மிக்ஜம் புயல் தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கிறது. நேற்று சுமார் 17 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்த இந்தப் புயல், இன்று வேகம் குறைந்து சராசரியாக 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

Latest Videos

undefined

நாளை பொது விடுமுறையா?அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சொன்ன பரபரப்பு தகவல்.!

வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய தகவலின்படி மிக்ஜம் புயல் சென்னையில் இருந்து 210 கி.மீ. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என என்றும் வாடிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தப் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், வட தமிழக மாவட்டங்களில் இன்று மாலை முதல் கனமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நாளை  (திங்கட்கிழமை) டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் உத்தரவை மீறி நாளை டாஸ்மாக் கடையைத் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் இன்னொரு யோகி! முதல்வர் பதவியைக் குறிவைக்கும் பாபா பாலக்நாத்!

click me!