தொடரும் குடிகார கணவர்களின் அட்ராசிட்டி - இன்றும் ஒரு கொலை!!

 
Published : Jun 22, 2017, 03:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
தொடரும் குடிகார கணவர்களின் அட்ராசிட்டி - இன்றும் ஒரு கொலை!!

சுருக்கம்

drunkard husband murdered his wife

மது குடிக்க பணம் தராததால், மனைவியை  கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த பல்லவராயன் குளத்தை சேர்ந்தவர் ராஜா (35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கல்பான (30). இவர்களுக்கு 8 மகளின் மகன் உள்ளார். ராஜாவுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் குடும்ப செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து கல்பனா, ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலைக்கு சென்றார். இதையொட்டி ராஜா, மனைவி வேலை செய்யும் இடத்துக்கே சென்று, குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வருவார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்பனா வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, அங்கு சென்ற ராஜா, குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். தன்னிடம் பணம் இல்லை என கல்பனா பலமுறை கூறியும், அதை அவர் ஏற்கவில்லை.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் நடு ரோட்டில் கடும் வாக்குவாதம் நடந்தது.  இதில் ஆத்திரமடைந்த ராஜா, கல்பானவின் கழுத்தை நெரித்தார். அப்போது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவர்களை தடுத்தனர். ஆனாலும், அவர் கல்பனாவின் கழுத்தில் இருந்து கையை எடுக்கவில்லை. இதில், கல்பனா மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே ராஜா, அங்கிருந்து தப்பிவிட்டார்.

தகவலறிந்து ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!