திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் நகரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் அதிக அளவில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
வாணியம்பாடி அருகே வகுப்பறையில் போதை பொருள் பயன்படுத்திய 7 பள்ளி மாணவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் தலைநகரில் தொடங்கி பட்டித்தொட்டி எங்கும் பரவி கிடக்கிறது. இதனை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் ஒழிந்த பாடியில்லை. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் நகரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் அதிக அளவில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து போலீசார் அதிரடி வேட்டையில் கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: Tamilnadu Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்!
இந்நிலையில் வாணியம்பாடி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் உள்ள 7 மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து ஆசிரியர் மாணவர்களின் பையை சோதனையிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: அய்யய்யோ! இன்னைக்குன்னு பார்த்து இவ்வளவு இடங்களில் மின் தடையா?
சிறிய வெள்ளை நிற பையில் இருந்து கஞ்சா மாதிரியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த 7 மாணவர்கள் ஒரு வாரம் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தேவன் கூறுகையில்: மாணவர்கள் பயன்படுத்தியது கஞ்சா இல்லை ஹேன்ஸ் புகையிலைப் பொருள் என்று தெரிவித்தார். இதுகுறித்து 7 மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.