வெளிநாடுகளில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ரூ.1 லட்சம் உத்தரவாத தொகையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் ஜெப்பூரில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இதையும் படிங்க: திருந்தாத TTF வாசன்! திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் வேலை காட்டியதால் ஆப்பு! தேவஸ்தானம் அதிரடி! நடந்தது என்ன?
இந்நிலையில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை ஒவ்வொரு மாதமும் திங்கட்கிழமை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். செயல்பாட்டில் இருக்கும் செல்போன் எண் மற்றும் பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
இதையும் படிங்க: அப்படியெல்லாம் உடனே டாஸ்மாக் கடைகளை குறைக்க முடியாது! அதுல சிக்கல் இருக்கு! அமைச்சர் முத்துசாமி!
முகவரி மாறினால் அது குறித்த விவரத்தையும் விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜாமீன் தொகையாக ரூ.1 லட்சமும், தலா ரூ. 1 லட்சத்துக்கு இருவரின் ஜாமீனையும் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் வழக்கில் ஜாமின் கிடைத்தாலும் அவரால் வெளியில் வர முடியாது. எனென்றால் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதாகி உள்ளதால் ஜாபர் சாதிக் திகார் சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.