ஈரோட்டில் நாக பாம்புக்கு கண் சிகிச்சை! காவலாளி செய்த தைரியமான செயல்! Exclusive : புகைப்படங்கள்!

By manimegalai aFirst Published Dec 25, 2018, 5:27 PM IST
Highlights

கண் தெரியாமல் ரோட்டில் கிடந்த நாகப்பாம்பை காவலாளி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 

கண் தெரியாமல் ரோட்டில் கிடந்த நாகப்பாம்பை காவலாளி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி சேர்ந்தவர் சுரேந்திரன். தனியார் நிறுவன காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சாலையில் ஒரு பாம்பு காயமடைந்த நிலையில் சுருண்டு படுத்துக் கிடந்தது.

அந்த பாம்பை தைரியமாக கையில் பிடித்த சுரேந்திரன் அதனை அருகில் கிடந்த ஒரு பையில் போட்டு கொண்டு,  மோட்டார் சைக்கிளில் 90 கிலோமீட்டர் தூரம் கடந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் வனத்துறை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் பாம்புக்கு இரண்டு கண்களும் தெரியவில்லை என்பது தெரியவந்தது. மேலும் இறை கிடைக்காமல் சோர்ந்து இருந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து விலங்குகளின் கண் மருத்துவர் ஆலோசனையின் படி பாம்புக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் தற்போது பாம்பின் கண் பார்வை மீண்டும் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  அதேபோல் பாம்பு தானே என  விட்டுவிடாமல் அதை தைரியமாக கையில் எடுத்துக்கொண்டு 90 கிலோமீட்டர் தூரம் சிரமம் பார்க்காமல் வண்டியிலேயே சிகிச்சைக்கு எடுத்துவந்து காவலாளியை, கால்நடை வனத்துறையினர் வெகுவாக பாராட்டினர்.

click me!