மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்.. செங்கல்பட்டில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்.!

By vinoth kumar  |  First Published May 31, 2023, 1:01 PM IST

செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். 


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று சுமார் 2 மணியளவில் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- குற்றப்பத்திரிகையில் என்ன இருக்குது தெரியாமல் எப்படி கருத்து கூற முடியும்? CBCID விசாரணை மீது நம்பிக்கை இல்லை!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திடீரென 50-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க;-  வளைவில் அதிவேகம்! கட்டுப்பாட்டை இழந்த பைக்! லாரி சக்கரத்தில் சிக்கி பலியான கல்லூரி மாணவர்கள்! பகீர் காட்சிகள்

இதனையடுத்து, கல்லூரி மருத்துவமனை முதல்வர், செங்கல்பட்டு நகர காவல்துறையினர் ஆகியோர் பயிற்சி மருத்துவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

click me!