ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் திருப்தி இல்லை - மதுரையில் வேல்முருகன் பேட்டி

By Velmurugan s  |  First Published May 31, 2023, 11:33 AM IST

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலைய வணிக வளாக கட்டுமான பணிகளில் திருப்தி இல்லை. எனவே, சில திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் மற்றும் குழுவினர், இன்று மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்பு, பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகம் கட்டமைப்பு, மாநகராட்சி குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Latest Videos

undefined

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் அளித்த பேட்டியில், "சட்டமன்றத்தில் மதுரை மாவட்டத்திற்கென முதலமைச்சர், அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகளில் 420 உறுதிமொழிகள் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 167 உறுதிமொழிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பிற பணிகள் தொடர்ந்து வருகின்றன. சில உறுதிமொழிகள் 2005ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக அவற்றின் திட்ட மதிப்பீடு உயர்ந்து மக்களின் வரிப்பணம் பாழாகிறது. எனவே, நிலுவையில் உள்ள பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். 

கரூரில் மாயமான சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு; திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகள், கற்கள் கொண்டு வருவதில் உள்ள நிர்வாக காரணங்களால் தாமதமாகி வருகிறது. இதுவரை 4 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதற்கு அறிவுறுத்தியுள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலைய வணிக வளாக கட்டுமான பணிகளில் திருப்தி இல்லை. எனவே, சில திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம்.

Crime: நெல்லையில் ஆண் வேடமிட்டு மாமியரை கொலை செய்த மருமகள்

சில கிராமங்களில் சாலை வசதி இல்லாத காரணத்தால் அரசு பேருந்துகள் இயக்க முடியவில்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பழுதடைந்துள்ள சாலைகள் முழுவதையும் முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

click me!