டெங்கு பாதித்தவருக்கு மீண்டும் டெங்கு வருமா.? தடுப்பது எப்படி..?

By thenmozhi gFirst Published Dec 29, 2018, 1:57 PM IST
Highlights

டெங்கு காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகிறது என்பது பற்றியும் இங்கு வந்தால் அதற்கு உண்டான சிகிச்சை முறையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் முன்னதாக வெளியிட்ட பதிவுகளில் பார்த்தோம். 

டெங்கு பாதித்தவருக்கு மீண்டும்  டெங்கு வருமா.? தடுப்பது எப்படி..? 

டெங்கு காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகிறது என்பது பற்றியும் இங்கு வந்தால் அதற்கு உண்டான சிகிச்சை முறையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் முன்னதாக வெளியிட்ட பதிவுகளில் பார்த்தோம்.

தற்போது டெங்கு ஒருமுறை வந்துவிட்டால் மீண்டும் அவருக்கு டெங்கு காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளதா என்பதையும் அவ்வாறு இருந்தால் அது எந்த அளவிற்கு நம்மை தாக்கும் என்பதையும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்ட பிறகு ஒருவருக்கு மீண்டும் வருமா என்றால் நிச்சயமாக வரும். ஆனால் ஏற்கனவே வந்த வைரஸ் பாதிப்பை விட இது பல மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இதில் நாம் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏற்கனவே வந்த அதே வைரஸால், பாதிப்பு ஏற்படாது ஆனால் டெங்குவில் டென் 1, டென் 2, டென் 3, டென் 4 என நான்கு வகைகள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்று மீண்டும் தாக்க வாய்ப்பு உள்ளது. 

டெங்கு காய்ச்சல் வந்த ஒருவர் குணமான பிறகு அவருடைய உணவு பழக்கவழக்கங்கள் எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

டெங்கு வந்து குணமடைந்த பிறகு தொடர்ந்து மூன்று அல்லது ஆறு நாட்கள் வரை கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும். அப்போது நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களையும், பழ வகைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், உதாரணமாக நீர்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோன்று உடற் பயிற்சியும் தேவைப்படுகிறது. அதில் குறிப்பாக யோகாசனங்கள், சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட சில பழக்கவழக்கங்களை மேற்கொள்ளலாம்.

டெங்கு பாதித்த ஒருவர் அதிலிருந்து முழுவதும் குணம் அடைந்த பிறகு மீண்டும் காய்ச்சல் வந்தால் அது டெங்கு அல்ல சாதாரண காய்ச்சல் என எண்ணி தாமாகவே மருந்தகங்களுக்கு சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி எடுத்துக்கொள்வது மிகவும் தவறானது. அந்த நேரத்தில் கண்டிப்பாக ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்

டெங்கு வராமல் தடுக்க நம் வீட்டை சுற்றி எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?

வீட்டை சுற்றியுள்ள பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், டயர் இவை அனைத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். நீண்ட நாட்களாக தேங்கியுள்ள தண்ணீர் தொட்டிகள், சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் தண்ணீர் தொட்டிகள் என அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். அல்லது கிருமி நாசினி மருந்துகளை கொண்டு தண்ணீர்தொட்டியை சுத்தம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

அடுத்து வரும் பதில் டெங்கு குறித்தும் அதற்கான  தடுப்பூசி குறித்தும் பார்க்கலாம். 

click me!