Chief Minister Stalin : தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், திமுகவின் மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் அவர்களை, அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசியுள்ளார்.
வருகின்ற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுகவின் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடக்கவிருக்கும் மாநாடு இது என்பதால் அரசியல் களத்தில் இது மிக முக்கிய மாநாடாக பார்க்கப்படுகிறது.
மேலும் திமுகவினர் மத்தியில் மிகவும் அவசியமான ஒரு மாநாடாக இது பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று பேச உள்ளார். தற்பொழுது சேலத்தில் மாநாடு நடக்கவிருக்கும் அந்த இடத்தில், மாபெரும் பந்தல் மற்றும் மேடைகள் அமைக்கும் பணி நடக்க துவங்கி உள்ளது என்றும், மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட பிற வசதிகள் அமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா விரைகிறார் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார்; மீண்டும் ரெசார்ட் கலாச்சாரம்!!
மேலும் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இந்த மாநாட்டில் பங்குபெறும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, செயல் வீரர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். அதேபோல நேற்று திமுகவின் மூத்த உறுப்பினரும், அமைச்சருமான துரைமுருகனை நேரில் சந்தித்து அவர் இளைஞர் அணி மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய ED அதிகாரி.. யார் இந்த அங்கித் திவாரி?
அதேபோல இந்த இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்புகளை விடுத்து வருகிறது திமுக என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தமிழக முதல்வரும், திமுகவின் தலைமருமான முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அமைச்சர் துரைமுருகன் அவர்களை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து இந்த மாநாடு குறித்து தற்பொழுது பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.