அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறையின் FIR வெளியானது!

By vinoth kumar  |  First Published Dec 2, 2023, 1:26 PM IST

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கையும் களவுமாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கியபோது கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியவர் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்ஆர்ஐ-ல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ.20 லட்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கையும் களவுமாக பிடிப்பட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவரை நீதிபதியின் முன் ஆஜர்படுத்த்பட்டார். இதனையடுத்து 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக நுழைந்து விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். சுமார் 13 மணிநேரம் நடைபெற்ற சோதனையானது இன்று காலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருக்கும் எஃப்ஐஆரில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டுள்ளது. 

 எஃப்ஐஆர் தகவல்கள்

* லஞ்சம் தர மறுத்தால் அரசு மருத்துவர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது மருத்துவ சேவையை களங்கப்படுத்திவிடுவதாகவும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார்.

* திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியுள்ளார்.

 * திண்டுக்கல் அரசு மருத்துவர் லஞ்சப் பணத்தை தயார் செய்துவிட்டு தொடர்பு கொண்டபோது மணல் குவாரியில் இருப்பதாக அங்கித் திவாரி கூறியுள்ளார்.

*  லஞ்ச பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்தனுப்ப முடியுமா என அங்கித் திவாரி மருத்துவரிடம் கேட்டுள்ளார்

* ஏற்கனவே பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளதால், மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் லஞ்ச பேரம் பேசினாரா என விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

click me!