தேர்தலுக்கு முன் ஓட்டை பற்றியும், தேர்தலுக்குப்பின் வீட்டை பற்றியும் தான் திமுக கவலைப்படும் என நடிகை விந்தியா விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தலுக்கு முன் ஓட்டை பற்றியும், தேர்தலுக்குப்பின் வீட்டை பற்றியும் தான் திமுக கவலைப்படும் என அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பரப்புரைக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாள்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகளின் சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன.
முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. பொது இடங்களில் நடைபெறும் பிரச்சாரங்களில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
நடிகை விந்தியா ஞாயிற்றுக்கிழமை சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விக்னேஷுக்கு ஆதரவாக சிவதாபுரம், தாதகாபட்டி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி தமிழகத்திலேயே குடியிருந்தாலும் ஜெயிக்க முடியாது: உதயநிதி ஸ்டாலின் உறுதி
அப்போது பேசிய விந்தியா, அதிமுக ஆட்சியில்தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. இப்போது திமுக ஆட்சியில் கோவில் வாசல் முதல் கல்லூரி வாசல் வரை கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது" என்று கூறினார்.
தமிழகத்திற்கு திமுகவும், இந்தியாவிற்கு பாஜகவும் ஆபத்தான விஷயம் என்ற நடிகை விந்தியா, அதிமுகவிற்கு காங்கிரசும், பாஜகவும் ஒன்றுதான். மக்களுக்காக அவர்களை எதிர்ப்போம் என்று வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி விமர்சித்த விந்தியா, "அதிமுகவிற்கு ஆதரவு அளித்தால் தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழகம் வரும் பிரதமரை இங்கேயே தவம் கிடக்க வைப்போம்" என்றார்.
திமுகவைப் பற்றித் தாறுமாறாகப் பேசிய அவர், "தேர்தலுக்கு முன் ஓட்டை பற்றியும், தேர்தலுக்குப்பின் வீட்டை பற்றியும் தான் திமுக கவலைப்படும்" என்றும் தெரிவித்தார்.
நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி