DMK PROTEST : பாஜக அரசுக்கு எதிராக களம் இறங்கி திமுக.! போராட்டத்திற்கு தேதி குறித்த ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Jul 25, 2024, 12:50 PM IST

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்களும், உரிய நிதியும் ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பாக ஜூலை 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


தமிழகத்தை கண்டுகொள்ளாத மத்திய பட்ஜெட்

மத்திய நிதி நிலை அறிக்கை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தை கூட இடம்பெறவில்லை. மேலும் தமிழகத்திற்கான ஒரு புதிய திட்டம் அறிவிக்கவில்லையெனவும், நிதி ஒதுக்கீடு செய்யவில்லையென திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் விமர்சித்திருந்தது. இந்தநிலையில் இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச் சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும். 

Tap to resize

Latest Videos

Budget: தமிழகத்திற்கு பட்ஜெட்டில் ஒன்றும் இல்லையா.? யார் சொன்னது.! ரயில்வே திட்டங்களை பட்டியலிட்ட மத்திய அரசு

ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பட்ஜெட்

ஆனால் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

ஜூலை 27 தமிழகம் முழுவதும் போராட்டம்

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர்  முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வேண்டுமா? அதுக்கு நீங்க 25 எம்.பி. குடுத்துருக்கணும் - அன்புமணி சர்ச்சை பேச்சு

click me!