Armstrong Murder News: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவுக்கு தொடர்பா? கொந்தளித்து எச்சரித்த அமைச்சர் ரகுபதி!

By vinoth kumar  |  First Published Jul 25, 2024, 7:45 AM IST

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை சொல்வதையே அச்சப்படும் நிதியமைச்சர் திருக்குறளையும், பாரதியாரையும் மறந்துவிட்டார் என்று விமர்சித்தார். 


ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தில் உள்ள 53 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியை சேர்ந்த 5538 மாணவ மாணவிகளுக்கு 2 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிதிவண்டிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை, மதுரை, திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட புதிய வழித்தடங்களில் 11 பேருந்து சேவையை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார். 

Latest Videos

undefined

இதையும் படிங்க: அய்யோ போலீஸ் கஸ்டடியா! வேண்டவே வேண்டாம்! நீதிபதியிடம் கதறிய ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள்! என்ன காரணம் தெரியுமா?

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி:  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை சொல்வதையே அச்சப்படும் நிதியமைச்சர் திருக்குறளையும், பாரதியாரையும் மறந்துவிட்டார் என்று விமர்சித்தார். மோடியை தனி மெஜாரிட்டியில் வெற்றிபெற விடாமல் தடுத்தது  இந்தியா கூட்டணி.  ஒன்றிய அரசின் நிதி கிடைக்கவில்லை என்றாலும் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாடு முதல்வர் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, செயல்பட்டு வருகிறார் என பெருமிதம் தெரிவித்தார். 

இதையும் படிங்க:  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! சைலண்டாக கைது செய்யப்பட்ட சம்போ செந்தில்? எங்கு? எப்போது? அடுத்து சிக்கப்போவது யார்?

பீகார், ஆந்திரா இல்லையென்றால் மோடி இல்லை. அதற்காக அவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில்  சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு கொண்டு வந்துள்ளோம். தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் என எச்சரித்தார். 

click me!