வரி வாங்கத் தெரியுது! நிதி கொடுக்கத் தெரியாதா? மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் திமுகவினர் முழக்கம்!

By vinoth kumar  |  First Published Jul 27, 2024, 11:26 AM IST

கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் திருப்திப்படுத்தவே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து விமர்சித்து வந்தனர். 


மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திராவின் அமராவதி நகர வளர்ச்சி கட்டமைப்புக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், பீகார் மாநிலத்திற்கு சிறப்புத் திட்டங்களாக, புதிய விமான நிலையம் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சாலைகள் அமைக்க ரூ.26,000 நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது. 

Latest Videos

இதையும் படிங்க: இதுதான் நல்ல சான்ஸ்! இப்ப வந்தா ஆம்ஸ்ட்ராங் போட்றலாம்! கொலையாளிகளுக்கு இன்பார்ம் கொடுத்த பீரதிப்! யார் இவர்?

பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? மேலும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் திருப்திப்படுத்தவே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து விமர்சித்து வருகின்றனர். நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக படுதோல்வியைச் சந்தித்ததால் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல், பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதன் காரணமாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் முதல்வர் புறக்கணித்தார். 

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டிற்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க:  Today Gold Rate In Chennai: நகைப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! மீண்டும் எகிறிய தங்கம்!கோவையில் நிலவரம் என்ன?

மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை மேயர், திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். 

click me!