DMK election strategy : ஸ்டாலினின் அதிரடி பிளான்.! 20ஆம் தேதி முதல் தொடங்குங்கள்-நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு

Published : Jun 11, 2025, 02:31 PM IST
stalin dmk

சுருக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில், திமுக தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஜூன் 20 முதல் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், அரசின் திட்டங்களை விளக்கவும் திட்டமிட்டுள்ளது. 

200 தொகுதி இலக்கு- தேர்தல் பணியை தொடங்கிய திமுக : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அந்த வகையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த அதிமுக- பாஜக ஒருபக்கமும், பாஜக மற்றொரு பக்கம் தவெகவும் திட்டம் தீட்டி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுகவும் களத்தில் இறங்கியுள்ளது. 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு தேர்தல் பணியை முடிக்கி விட்டுள்ளது. இதற்காக திமுகவின் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜூன் 20ஆம் தேதி முதல் வீடு வீடாக உறுப்பினர் பணியை தொடங்கும் திமுக

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருகிற 20-ந்தேதி முதல் வீடு வீடாக தி.மு.கவினர் சென்று புதிய வாக்காளர்களை சேர்க்க உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் தி.மு.க. உறுப்பினர்களாக யார் யார் உள்ளனர் என்ற விவரங்களை கேட்டு அதன் அடிப்படையில் வாக்காளர்களை தி.மு.க.வில் சேர்க்க உள்ளனர். இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக ஒன்றிய, நகரம், பேரூர் பகுதி அளவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கழகத்தினர் இணைத்து வீடு வீடாகச் சென்று, ஒவ்வொரு தொகுதிகளிலும் மொத்தம் 7 வட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை திமுகவில் சேர்த்திடும் மிக முக்கியமான பணியை விரைந்து செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி வருகிற ஜூன் 20-தேதி தொடங்கப்பட உள்ளது. இது மட்டும்மில்லாமல் அந்த அந்த பகுதியில் உள்ள திமுகவினர் வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும், மக்களிடம் விரிவாக விளக்கிக் கூறி கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணியில் ஈடபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கவும் திமுக அறிவுறுத்தல்

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மாதங்களே இருப்பதால் தேர்தல் பிரசாரமாகக் கருதி, இந்த உறுப்பினர் சேர்க்கும் பணியை திமுகவினர்அனைவரும் இணைந்து சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்திலும் உள்ள 100 வாக்காளர்களுக்கு ஒரு தேர்தல் பணிக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுளது. எனவே தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 வாக்காளர்களில், 30-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களாக சேர்த்திடும் பணியை முழுவீச்சில் செய்ய திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!