
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு : சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் . வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய வடபழனி பணிமனை வளர்ச்சி திட்டத்துக்கான ஒப்பந்தத்தை ரூ.481.3 கோடி மதிப்பில் வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டம், சென்னையின் மிகவும் பரபரப்பான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஆற்காடு சாலையில் 6.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வடபழனி பேருந்து பணிமனை இடத்தில் உருவாக்கப்படும். 158 பேருந்துகளுக்கு மேலாக, தினமும் 1158 சேவைகளுடனும், வடபழனி சென்னை மாநகரின் பரபரப்பான 32 பணிமனைகளில் ஒன்றாகும்.
இந்த வளர்ச்சி திட்டம். அதிக தேவை கொண்ட நகர்ப்புற மையத்தை உலகத்தரம் வாய்ந்த, பல்நோக்கு வசதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தள வடிவமைப்பு இரண்டு அணுகல் வழிகளை வழங்குகிறது. ஒன்று பேருந்து முனையத்தை பயன்படுத்துபவர்களுக்காக ஆற்காடு சாலையிலிருந்து (24மீ அகலம்) மற்றொன்று வணிகப் பயன்பாட்டிற்காக குமரன் காலனி பிரதான சாலையிலிருந்து (12மீ அகலம்). இந்த வளர்ச்சி திட்டம் சீரான போக்குவரத்து இயக்கம், 2,801 சதுர மீட்டர் திறந்த வெளி ஒதுக்கீடு மற்றும் 2,304 சதுர மீட்டர் பூங்கா/தோட்டம் பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளது.
இந்த லட்சியத் திட்டம் சென்னையின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு பெரிய படியை குறிக்கிறது. நவீன வணிக மற்றும் அலுவலக இடங்களுடன் ஒருங்கிணைந்த உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து மையத்தை உறுதியளிக்கிறது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.