அம்பலமாகும் திமுகவின் ஊழல்கள்! கருணாநிதி செய்ததை ஸ்டாலின் செய்வாரா? அண்ணாமலை அட்டாக்!

Published : Jun 20, 2023, 12:02 AM ISTUpdated : Jun 20, 2023, 12:06 AM IST
அம்பலமாகும் திமுகவின் ஊழல்கள்! கருணாநிதி செய்ததை ஸ்டாலின் செய்வாரா? அண்ணாமலை அட்டாக்!

சுருக்கம்

செம்மண் முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை முன்வைத்து அண்ணாமலை திமுகவை விமர்சித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கில் விசாரணைக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கில் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை பிறப்பித்துள்ள இந்த உத்தரவு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அமைச்சர் பொன்முடியை சரமாரியாகக் குற்றம் சாட்டியிருப்பதுடன் பொன்முடி மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் மீண்டும் விடிய விடிய மழை பெய்ய வாய்ப்பு! அலர்ட் செய்யும் வானிலை அறிவிப்பாளர்கள்!

"மூடிய அலமாரிக்குள் இருந்து எலும்புக்கூடுகள் கிளம்பி வருவது போல், திமுக அமைச்சர்களின் ஊழல்கள் ஒவ்வொரு வாரமும் அம்பலமாகி வருகின்றன. திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் பலர் மீது தொடரப்பட்ட வழக்குக்கு விசாரணைக்கு தடை விதிக்க, உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது"  என ட்விட்டரில் அண்ணாமலை எழுதியுள்ளார்.

தொடர்ந்து, கருணாநிதி ஆட்சியில் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை நினைவூட்டிய அண்ணாமலை, "முந்தைய திமுக ஆட்சியில், பதவியை தவறாக பயன்படுத்தினார்கள் என்பதற்காக அப்போதைய அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்ப்டடனர். அதைப்போல, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்குவாரா? அல்லது செந்தில் பாலாஜியை பத்திரமாகக் பார்த்துக்கொள்வது போல இவரையும் பாதுகாப்பாரா?" என்றும் அண்ணாமாலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூ.28,37,65,600 கோடி ஊழல்!

கடந்த 2006-11 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு சுமார் ரூ.28,37,65,600 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன், உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

8 ரயில்களில் 2ஆம் வகுப்பு பெட்டிகளைக் குறைத்து ஏசி பெட்டிகளை சேர்க்கும் தெற்கு ரயில்வே!

இந்த வழக்கு மீதான விசாரனை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை தொடர அனுமதி அளித்துள்ளது. மேலும், 2006-11இல் சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுவரை யாரும் செய்யாத சாதனை! ஒரே ஆர்டரில் 500 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் இண்டிகோ!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!