கலைஞர் நூலகம் குறித்து பேசிய அவர், இது அறிவு சார்ந்த விஷயம் என்பதாலும், இதனால் பலர் பலனடைவார்கள் என்பதாலும் இது ஒரு வரவேற்கத்தக்க விஷயம் தான் என்று கூறினார்.
தற்போதைய திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம், தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை திட்டம் என்று மாறி உள்ளதாக கூறி, அது பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் அந்த விஷயம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கலைஞர் நூலகம் குறித்து பேசிய அவர், இது அறிவு சார்ந்த விஷயம் என்பதாலும், இதனால் பலர் பலனடைவார்கள் என்பதாலும் இது ஒரு வரவேற்கத்தக்க விஷயம் தான் என்று கூறினார். அதேபோல இது ஓரிடத்தில் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இது போன்ற நூலகங்கள் திறப்பது பலருக்கு உபயோகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
undefined
மேலும், ஆரம்பத்தில் திமுக அரசு பொதுவாக மகளிர்க்கு உரிமை தொகை வழங்கவிருக்கிறோம் என்று கூறிவிட்டு தற்பொழுது தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளது கண்டனத்திற்குரியது என்று அவர் கூறினார்.
மேலும் வாக்குறுதி அளித்தபடி அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு என்றும் அவர் காட்டமாக தெரிவித்தார். தனது இளைய மகனின் அடுத்த திரைப்படத்திற்கான பூஜையில் கலந்து கொள்ள பாலக்காட்டிற்கு அவர் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனின் இசைக்கச்சேரி மிகப்பிரம்மாண்டமான முறையில் மும்பையில் நடக்கவுள்ளது. நவம்பர் மாதம் மும்பையில் நடக்கவிருக்கும் ஒரு இசை திருவிழாவில் பங்கேற்கவுள்ளார் 50 சென்ட். உலக புகழ்பெற்ற ஹிப் ஹாப் பாடகரான 50 சென்ட் பங்கேற்கும் இந்த நிகழ்வில் விஜய பிரபாகரன் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத ஊதியம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்த முடியும்? ராமதாஸ் கேள்வி..!