Diwali : தீபாவளி சிறப்பு ரயில்களில் இன்றுமுதல் முன்பதிவு.. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு..விவரம் இங்கே..

By Thanalakshmi VFirst Published Oct 19, 2022, 8:07 AM IST
Highlights

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி , புதுக்கோட்டை, சிவகங்கை , விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வரும் தீபாவளி என்பதால் லட்சகணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே அரசு விரைவு பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட் முழுவதும் நிரம்பி விட்டன. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் திரும்பும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 16ஆயிரத்து 888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதேபோல் தற்போது தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க:மக்களே அலர்ட்..! ஜாலியாக ஊருக்கு போலாம்..! பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. அறிவிப்பு வெளியானது..

அதன்படி சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை தாம்பரத்திலிருந்து 20 ஆம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாளை காலை 9 மணிக்கு நெல்லைக்கு சென்றடையும்.மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து 21 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாளை அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மேலும் சென்னை - நெல்லை இடையேயான சிறப்பு ரயில் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி , புதுக்கோட்டை, சிவகங்கை , விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது. அதே போன்று, தீபாவளி முன்னிட்டு தஞ்சை - செகந்திரபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  செகந்திரபாத்திலிருந்து தஞ்சாவூருக்கு 22,29 ஆகிய தேதிகளிலும், தஞ்சாவூரிலிருந்து செகந்திரபாத்திற்கு 24,31 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க:தீபாவளிக்கு எத்தனை சிறப்பு பேருந்து.? எங்கிருந்து இயக்கப்படுகிறது..? முன்பதிவு தொடங்கியதா..? சிவசங்கர் தகவல்
 
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிறது. செகந்திரபாத்திலிருந்து இரவு 8.25 மணிக்கு புறப்படும் ரயில், தஞ்சாவூருக்கு மறுநாள் காலை 7.10 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கமாக தஞ்சாவூரிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில்,செகந்திரபாத்திற்கு மறுநாளை காலை 6.30 மணிக்கு சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

click me!