மக்களே அலர்ட் !! தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா..? இன்று முதல் முன்பதிவு தொடக்கம்.. முழு தகவல்..

By Thanalakshmi VFirst Published Jun 23, 2022, 11:04 AM IST
Highlights

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துளளது.
 

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதனால் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து உள்ளிடவை இயக்கப்படும். 

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துளளது. ரயில்களில் டிக்கெட் முன்பதிவை 120 நாட்களுக்கு முன்பு இருந்தே செய்ய முடியும். அதன்படி  தீபாவளிக்கு சொந்த ஊர் சொல்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் இன்றுமுதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க: அக்னிபத் போராட்டம்.. இன்று முதல் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்படும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 திங்கள்கிழமை வருவதால், முன்னதாக அக்டோபர் 21 ஆம் தேதியே இருந்தே சொந்த ஊர் செல்பவர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கும். அதன்படி, அக்டோர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஊர் செல்லவிருப்போர் இன்று முதல்  டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். அக்.22ஆம் தேதி செல்வோருக்கு ஜூன் 24ஆம் தேதியும், அக்.23ஆம் தேதி ஞாயிற்றுகிழமை பயணம் செய்வோருக்கு ஜூன் 25ஆம் தேதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அதே போல சொந்த ஊர்களிலிருந்து பணியிடம் திரும்புவதற்கு ஏதுவாக, அக்.24 ஆம் தேதி திரும்புவர்களுக்கு ஜூன் 26 ஆம் தேதியும் அக்.25 ஆம் தேதி திரும்புவோருக்கு ஜூன் 27 ஆம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது. இதனால் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள், ரயில் கால அட்டவணையின்படி திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள பயணிகளை தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க: மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 திட்டம்... ஊக்கத் தொகை பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியீடு..!

click me!