கோவை மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் விதமாக கடந்த முறை வாக்கு பதிவு குறைந்த இடங்களில் அதிக கவனம் செலுத்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக கோவை சரவணம்பட்டி பகுதியில் பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நூறு சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரசார பாடலுக்கு துள்ளல் நடனமாடிய பொன்முடி; பெண்கள் உற்சாகம்
முன்னதாக தேர்தல் ஆணைய லோகோ வடிவம் மற்றும் வோட் ஃபார் 100 எனும் வடிவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அணிவகுத்து நின்றதை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கல்லூரிகளில் முதல் முறை வாக்காளர்கள் அதிகம் இருப்பதால் கல்லூரிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் விதமாக கடந்த முறை வாக்கு பதிவு குறைந்த இடங்களில் அதிக கவனம் செலுத்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.